சாயக்கழிவுநீரால் பாதிப்பு: விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சாயக்கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நிலத்தின் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-06-10 22:45 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யலில் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சின்னசாமி, உதவி செயலாளர் அர்ச்சுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் முருகேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுபெற தனி நீதிபதி நியமிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் தனித்தனியாக ஆவணங்கள் தயார் செய்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

நஷ்டஈடு வழங்க வேண்டும்

திருப்பூர் சாயக்கழிவு நீர் சுத்தகரிக்கப்படாமல் மழை காலங்களிலும் மற்ற தினங்களிலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் நல்லநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் சாயக்கழிவுநீரால் 15 ஆயிரம் விவசாயிகளின் 35 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நஷ்டஈடு வழங்க வேண்டும். கொடுமணல் விவசாய சங்க தலைவர் உதயகுமார், சங்க நிர்வாக தங்கராசு, வக்கீல் குணசேகரன் , விவசாய பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்