கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-11 21:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை 

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி நகரில் 2–வது குடிநீர் குழாய் திட்டத்தில் பகிர்மான குழாய் அமைக்கப்பட்ட இடங்களில் புதிதாக சாலை அமைக்க வேண்டும். 2–வது குடிநீர் குழாய் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 3 தொட்டிகளின் பணிகள் நிறைவு பெறவில்லை. எனவே அந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும். குப்பை வரிவசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

கோரிக்கை மனு 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவில்பட்டி நகரசபை அலுவலக மேலாளர் முத்துசெல்வத்திடம் கொடுத்தனர்.

இதில் தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், கோமதி, ஜோசப், நகர குழு உறுப்பினர்கள் உலகநாதன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் தலைமையில் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் சுடலைமுத்துவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற 25–ந்தேதி ரெயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தனர். 

மேலும் செய்திகள்