திருத்துறைப்பூண்டி-சென்னை இடையே ரெயில் இயக்கப்படுமா? ரெயில் பயணிகள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி-சென்னை இடையே ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-06-12 22:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த 1-ந் தேதி ரெயில் ே்சவை தொடங்கியது.

முன்பு மீட்டர்கேஜ் பாதையாக இருந்த இந்த வழித்தடத்தில் சென்னை, ராமேசுவரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன.

அகலப்பாதை அமைக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக திருவாரூர்-காரைக்குடி இடையே மட்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பயணிகள் எதிர்பார்ப்பு

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு உடனடியாக ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர் மணிமாறன் ஆகியோர் கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு பஸ்சில் மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

சென்னைக்கு ரெயில்

அகலப்பாதை பணிகள் முடிவடைந்து விட்டதால் சென்னைக்கு உடனடியாக ரெயில் இயக்க வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை செல்வதற்கு வசதியாக திருவாரூர் வரை இணைப்பு ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்