ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு.

Update: 2019-06-12 22:30 GMT
பெரம்பலூர்,

அகில இந்திய மக்கள் சேவை இயக்கம், பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கம், மக்கள் பாதை, மக்கள் உரிமை பொது மேடை, தமிழ் பேரரசு கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நேற்று பெரும்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களுடைய மூச்சுக்காற்றை பலூனில் நிரப்பி, நூதன முறையில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினால் சுவாசிக்கும் காற்றுக்கே ஆபத்து வந்து விடும். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர் என்பதனை, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதி மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை கலெக்டர் வலியுறுத்த வேண்டும், கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்