அரவக்குறிச்சி மண்மாரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி மண்மாரி பகுதியில் வசிக்கும், பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும் எனதொழிலாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-06-12 22:00 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் ஏ.ஐ.டி.யு.சி. கரூர் மாவட்ட அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து பொதுதொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டடம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முதார்மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வாசுகி வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் கணேசன் ேபசினார்.கூட்டத்தில் அரவக்குறிச்சி மண்மாரி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பள்ளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு இடங்களில் வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும்

அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பொதுமக்கள் பயனடையும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள் அனைத்தும் அரவக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரவக்குறிச்சி பள்ளபட்டி பகுதியில் ஓடும் நங்காஞ்சி ஆற்றை தூய்மைபடுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சின்ன காளிமுத்து, பாலு, மாதர்ஷா. சாதிக்அலி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்