திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று காலை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-13 22:30 GMT
திருச்சி,

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு அதன் தரத்தை உயர்த்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய 75 பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று காலை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் துளசி, ஆனந்த் மற்றும் பள்ளிச்சீருடையுடன் 2 மாணவிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர், கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. போராட்ட முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்