டாக்டர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

டாக்டர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2019-06-17 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் சிறிதுதூரம் பேட்டரி வாகனத்தை அவரே ஓட்டி சென்றார்.

அதைத்தொடர்ந்து அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் அதிகாரி சாந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

டாக்டர்கள் இரவு-பகல் பாராமல் கடமை உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் பணிபுரிந்து வருகின்றனர். கொல்கத்தாவில் நடந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்று. தமிழகத்தில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்