பாட்டி, பேரனை கொலை செய்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை ஐகோர்ட்டு உறுதி செய்தது

பாட்டி, பேரனை கொலை செய்து ரூ.15 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்தவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2019-06-17 21:45 GMT
மும்பை, 

மும்பை சாந்தாகுருசை சேர்ந்தவர் உஷா பென்(வயது70). இவர் கடந்த 2008-ம் ஆண்டு சம்பவத்தன்று வீட்டில் பேரன் ஹர்சுடன்(7) இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் உஷா பென் மற்றும் ஹர்சை கொலை செய்துவிட்டு ரூ.15 லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்தது யாதுபகதூர் சிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு யாதுபகதூர் சிங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து யாதுபகதூர் சிங் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு யாதுபகதூர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தது. மேலும் அவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்