பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-06-19 22:45 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேஉள்ளவிசுவநாதபேரியைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (வயது 47). இவர் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்து தாயம்மாள் (42). இவர்களுக்கு குழந்தை இல்லை.

இவர்களது திருமணத்தின்போது, முத்து தாயம்மாளின் குடும்பத்தினர் 30 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் சிங்கராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு, முத்து தாயம்மாளை சித்ரவதை செய்தனர்.

இதற்கிடையே சிங்கராஜ் 2-வதாக விசாலாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த முத்து தாயம்மாள் தன்னுடைய கணவரிடம் கேட்டார். அப்போது சிங்கராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் முத்து தாயம்மாளை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் சிங்கராஜ், விசாலாட்சி, உறவினர்களான ராமையா மனைவி தங்கம், விசுவநாதபேரியைச் சேர்ந்த ரனவீரு, முனியாண்டி, அவருடைய மனைவி அம்பிகா, குருசாமி மகன் மருதுராஜன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்