அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-24 23:00 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 88 மாணவ- மாணவிகள் படித்து வருகின்ற னர். இந்த மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பதற்காக 4 ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் வருகிற கல்வி ஆண்டில் 30 மாணவர்களை கூடுதலாக பள்ளியில் சேர்த்து விடுவோம் என்று அறந்தாங்கி மாவட்ட கல்வி அதிகாரிக்கு, புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இதை யடுத்து பொதுமக்களின் முயற்சியால் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர் கள் தங்களது மாற்று சான்றிதழ்களை பெற்று இப்பள்ளியில் சேர்ந்துள்ள னர்.

சாலை மறியல்

இதையடுத்து தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில மாணவர்களையும் சேர்க்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியரை நிர்வாகம், பணியிடம் மாறுதல் செய்துள் ளது. இதையடுத்து மாணவர் களின் கல்வித்தரம் உயர உடனடியாக ஒரு ஆசிரியரை பணியமர்த்த கோரி பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களும் ஆலங்குடி- பள்ளத்தி விடுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடாமல் கல்வி அதிகாரி வந்து உத்திரவாதம் தரும் வரை சாலை மறியல் தொடரும் என்று கூறினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் ஜேம்ஸ், நடராஜன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேல் அதிகாரியுடன் பேசி ஒரு வாரத்திற்குள் கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமனம் செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆலங்குடி-பள்ளத்திவிடுதி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்