ஜிப்மர் மருத்துவமனை சார்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

ஜிப்மர் மருத்துவமனை சார்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருத்தரங்கு நடந்தது.

Update: 2019-06-30 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் குடலியல் அறுவை சிகிச்சை துறை சார்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருத்தரங்கு அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. கருத்தரங்கை ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் புகழ்பெற்ற ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சோமசேகர், டாக்டர் ஓ.வி.சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

சிக்கலான அறுவை சிகிச்சை

இந்த கருத்தரங்கு குறித்து ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை துறை இணை பேராசிரியர் டாக்டர் கலையரசன் கூறியதாவது:-

ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பது மருத்துவ ரோபோட்களின் உதவியோடு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் துல்லியமாக செய்யும் அறுவை சிகிச்சை முறையாகும்.

அரசு மருத்துவமனைமற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் இரைப்பை, உணவுக்குழாய், கணையம், கல்லீரல் மற்றும் குடலியல் பிரச்சினைகளுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்