பெண்களிடம் நகையை பறித்தவருக்கு 20 மாதம் சிறை தண்டனை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு

அவினாசி பகுதியில் பெண்களிடம் நகையை பறித்தவருக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து அவினாசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-07-03 22:30 GMT
அவினாசி,

அவினாசி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). சம்பவத்தன்று இவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார்.

இதேபோல் அவினாசியை அடுத்த கருவலூரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மனைவி பூங்கோதையிடம் (25 ) இருந்து 2½ பவுன் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் பறித்துச் சென்றார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாளையத்தைச் சேர்ந்த அழகர்(35)என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது அவினாசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 20 மாதம் சிறைதண்டனையும், ரூ. 300 அபராதமும் விதித்தார்.

மேலும் செய்திகள்