கோஷ்டி மோதல்; தாய்-மகன் கைது பெண் வக்கீல் உள்பட 5 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தாய்-மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் வக்கீல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-07-06 22:15 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே உள்ள திருவிளையாட்டம் கால்வாய்க்கரை தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் (வயது 60). இவருடைய மகன் மோசிக்ராஜ். சம்பவத்தன்று மோசிக்ராஜ் தரப்புக்கும், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்த விஜயராகவன் (30) தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் அந்தோணிதாஸ் மற்றும் அவருடைய மகள்கள் வக்கீல் நிர்மலா, சர்மிளா, மகன்கள் வின்சென்ட்ராஜ், மோசிக்ராஜ் ஆகிய 5 பேரும் காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தோணிதாஸ் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார், விஜயராகவன், அவருடைய தாய் துளசி (48) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல் துளசி கொடுத்த புகாரின்பேரில் அந்தோணிதாஸ், அவருடைய மகள் வக்கீல் நிர்மலா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் ஜெகதராஜ், சங்கமித்ரன் உள்ளிட்டோர் மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வக்கீல் நிர்மலாவின் வீட்டின் அருகில் ஏசுராஜ், விஜயராகவன் ஆகிய 2 பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து வழக்கும் பதிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் வக்கீல் நிர்மலா குடும்பத்தினர் தான் எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா வீடு புகுந்து தாக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் முன் விரோதம் காரணமாக வக்கீல் நிர்மலா குடும்பத்தினரை மீண்டும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வக்கீல் நிர்மலா குடும்பத்தினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்