கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-07-10 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேரூராட்சியில் பணிபுரியும் அனைத்து இளநிலை உதவியாளர்களை அரசாணை 76 பாதிப்பதாகவும், எனவே அந்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பேரூராட்சியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்குவது அவசியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மகுல சிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரன், பொது செயலாளர் கனகராஜ், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜகுமார், மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்