‘வாட்ஸ்-அப்’ தகவல் பரிமாற்றத்தால் மோதல்: ஓட்டல் ஊழியருக்கு கத்திக்குத்து

சென்னை தியாகராயநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் அன்சூர் அலி. வடமாநிலத்தை சேர்ந்த இவர், சென்னையில் பணியாற்றும் நண்பர்களோடு ‘வாட்ஸ்-அப்’ குழுவில் இணைந்து இருந்தார்.

Update: 2019-07-12 22:30 GMT
சென்னை,

‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது நண்பர்களுக்கு அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வார். அவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்தபோது அவர்கள் நண்பர்கள் இருவரோடு அன்சூர் அலிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

‘வாட்ஸ்-அப்’பில் ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் தகவல் அனுப்பினார்கள். ‘வாட்ஸ்-அப்’பில் ஏற்பட்ட கருத்து மோதல் நேரடியாக மோதும் சூழ்நிலையை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் இரவு அன்சூர் அலி தியாகராயநகர் பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்கள் 5 பேர் அங்கு வந்து அன்சூர் அலியோடு தகராறில் ஈடுபட்டனர். அவர் கத்தியால் குத்தப்பட்டார். அவரை கத்தியால் குத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்தில் காயமடைந்த அன்சூர் அலி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்