வானவில் : சமையலறையின் சகலகலா வல்லவன்

சமையலறையில் வந்துள்ள பல நவீன கருவிகள் இல்லத்தரசிகளின் சமையல் பளுவை வெகுவாகக் குறைத்துள்ளன என்றால் அது மிகையல்ல.

Update: 2019-07-17 11:55 GMT
 ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சாதனத்தை தேர்வு செய்ய வேண்டியிருப்பது கொஞ்சம் சிரமமான விஷயம். ஆனால் அனைத்து வேலைகளையும் செய்யும் சாதனம்தான் தெர்மோமேக்ஸ் டி.எம் 6. இதில் மாவு அரைக்கலாம், மாவு பிசையலாம், கலக்கலாம். சமைக்கலாம். காய்கறி, இறைச்சிகளை வேக வைக்கலாம். இப்படி பலவிதமான பணிகளையும் இது சிறப்பாக நிறைவேற்றும். ரொட்டி, சூப் உள்ளிட்ட பல வகையான விதவிதமான உணவுகளை இந்த ஒரே சாதனத்தில் தயாரிக்க முடிவதுதான் இதன் சிறப்பு. இந்த சாதனத்தில் தேவைக்கேற்ற பணிகளை நிறைவேற்ற தொடு திரை உள்ளது. இந்த சாதனம் முழுவதுமே மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதனால் சுவை மிகவும் துல்லியமாக, நீங்கள் நினைப்பதைப் போல தயாரிக்க முடியும்.

இதில் அதிகபட்சமாக 160 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் வரை உணவு சமைக்கலாம். இதனால் இறைச்சி போன்ற உணவுகள் சமைக்க மிகவும் ஏற்றது. மிக்சிங் பவுல், கலக்குவதற்கு ஸ்பாட்டுலா, அரைப்பதற்கு பிளேடு, கலக்குவதற்கு கலக்கி, வேகவைக்க தனி பவுல், அளவீடு கோப்பை உள்ளிட்ட தனித்தனி உபகரணங்கள் இத்துடன் அளிக்கப்படுகிறது. இதன் செயல்திறனை பார்த்து சமைக்கத் தொடங்கினால் இதை சமையலறையின் சகலகலா வல்லவன் என்றே கூறத் தோன்றும்.

மேலும் செய்திகள்