அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-07-18 22:30 GMT
அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருகை தந்தனர்.

இதில் மத்திய நிதித்துறை இயக்குனர் காந்தி குமார், மத்திய குடிநீர் ஆணைய துணை இயக்குனர் ஷீலா பிலாய், செயற்பொறியாளர் எம்.செந்தில்குமார், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசுந்தரம், உதவி பொறியாளர்கள் ஜி.எஸ்.உதயகுமார், சிவசங்கரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேமிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நடத்தி கலந்துரையாடினர். மகளிர் சுய உதவி குழுக்கள், தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிகளிடம் நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஊராட்சி செயலாளர்கள் ஏழுமலை, கலாவதி, வரதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஒரத்தியில் நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் செய்திகள்