கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2019-07-21 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரிமா சங்கம், அஸ்வா குங்பூ ஆல் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் பசுமை இயக்க பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் ஆண்கள், பெண்களுக்கு 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கு டாக்டர் தாமோதரன் தலைமை தாங்கினார். வனசரக அதிகாரி சிவராம் முன்னிலை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. ஆண்களுக்கான 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியில் முதல் பரிசாக ரூ.2 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.1000-ம், 3-வது பரிசு ரூ.750-ம் வழங்கப்பட்டது. அதே போல் பெண்களுக்கான 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியில் முதல் பரிசாக ரூ.1500-ம், 2-வது பரிசாக ரூ.750-ம், 3-வது பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், அரிமா சங்க தலைவர் அந்தோணி சாமி, நெல்லை கல்லூரி கல்வி துணை இயக்குனர் மயிலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் காசிமாரியப்பன் செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்