ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராகவில்லை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி நேற்று ஆஜராகவில்லை.

Update: 2019-07-22 23:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலாதேவி, அந்த கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் ஆஜரானார்கள். நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5–ந் தேதிக்கு நீதிபதி காயத்ரி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு கடந்த 7–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது ஆஜரான நிர்மலாதேவி, கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்து பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்