4-ம் ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2019-07-27 22:30 GMT
கரூர்,

தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் பிறந்த அப்துல்கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக பணியாற்றி அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். அதோடு மட்டும் அல்லாமல் இந்திய ஜனாதி பதியாக பொறுப்பேற்று நாட்டிற்கு அளப்பரிய பணிகளை செய்தார்.

நேற்று அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி கரூரில் பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் சார்பில் அவரது உருவப்படத்திற்கு ஆங்காங்கே தெருப்பகுதிகளில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டு, அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றினையும், அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் மேற்கொண்ட பணி களையும் நினைவு கூர்ந்தனர்.

உறுதிமொழி

இதேபோல் கரூர் கோட்டையண்ணன் கோவில் தெருவிலுள்ள ஒரு டீக்கடையில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. விஞ்ஞான ரீதியாக பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மரக்கன்றுகள் நட்டு உலக சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்கிற செயல்பாட்டில் தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமாக இருந்தவர் அப்துல் கலாம். எனவே அவரது நினைவு தினத்தையொட்டி அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர். 

மேலும் செய்திகள்