விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் சாலை மறியல்

கொத்தமங்கலத்தில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் சாலை மறியல்.

Update: 2019-07-30 22:30 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் கொடுக்காமல் தற்போது பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று கேட்கும் போது மடிக்கணினி வரவில்லை என்று கூறப்படுவதால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் அனைத்து மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்