புனே மத்திய சிறை முன்பு போலீசாரை தாக்கிய வாலிபர் கைது

கைதியான தனது தம்பிக்கு சாப்பாடு கொடுக்க அனுமதி மறுத்த ஆத்திரத்தில் புனே மத்திய சிறை முன்பு போலீசாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-17 22:48 GMT
புனே, 

அகமதுநகரை சேர்ந்தவர் வாசிம். இவர் மீது புனே, அகமதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நகைப்பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாசிமை பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீராம்புர் சப்-ஜெயிலில் இருந்து புனே ஏரவாடா மத்திய சிறைச்சாலைக்கு போலீசார் மாற்றினர்.

சம்பவத்தன்று அவரை 3 போலீசார் சப்-ஜெயிலில் இருந்து புனே எரவாடா மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இதில் மத்திய சிறை வாசலில் வாசிமின் அண்ணன் ஆசிப் (வயது32) நின்று கொண்டு இருந்தார். அவர் சாப்பாடு மற்றும் பீடிகட்டை வாசிமிடம் கொடுக்க முயன்றார்.

போலீசார் கைதிக்கு சாப்பாடு கொடுக்க கூடாது என ஆசிப்பை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை தாக்கினார். மேலும் அவரது தலையை அங்குள்ள சுவரில் மோதிக்கொண்டார். இதனால் மத்திய சிறை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் அங்கு நின்ற போலீசார் ஆசிப்பை பிடித்து ஏரவாடா போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்