முதல்கட்டமாக 41 இடங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று நடக்கிறது

தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்டமாக 41 இடங்களில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று (வியாழக் கிழமை) நடக்கிறது.

Update: 2019-08-21 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இத்திட்டத்தின் மூலம் நகரங்கள், வார்டுகள் மற்றும் கிராமங்கள் தோறும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் நகர்புற நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களை கொண்ட குழுவினர், நேரடியாக சென்று மனுக்களை வருகிற 31-ந் தேதிக்குள் பெற வேண்டும். பெற்ற மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும்.பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் அனைத்துத்துறை அலுவர்களை கொண்ட குழுவினரிடம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை அளித்து பயன்பெறலாம்.

41 இடங்கள்

முதல்கட்டமாக வல்லம் வடக்கு, கொண்டவிட்டான் திடல், கொல்லாங்கரை, முகாசாகல்யாணபுரம், தென்பெரம்பூர், கடுவெளி, மகாராஜபுரம், மன்னார்சமுத்திரம், திருவாலம்பொழில், பெரியகோட்டைக்காடு, வெங்கரை, வேதநாயகிபுரம், அக்கரைவட்டம், கக்கரைகோட்டை, ஆயங்குடி, கண்டமங்கலம், தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆவராம்பட்டி, மகாதேவபுரம், கச்சமங்கலம், ஆச்சாம்பட்டி, செங்கிப்பட்டி, நீரத்தநல்லூர், விளங்குடி, கொத்தங்குடி, உக்கடை, கோவிந்தநாட்டுசேரி, பாபநாசம், காவனூர், மகாராஜபுரம், பாஸ்கரராஜபுரம், ஆனந்தகோபாலபுரம் வடக்கு, நடுவிக்கோட்டை, புளியக்குடி, காடந்தங்குடி, பொன்னவராயன்கோட்டை உக்கடை, பொன்னவராயன்கோட்டை, வெண்டாக்கோட்டை உள்பட 41 இடங்களில் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக் கிறது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

மேலும் செய்திகள்