மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டுமே அனுமதி மத்திய அரசு கூடுதல் செயலாளர் தகவல்

மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் கூறினார்.

Update: 2019-08-22 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நீர் மேலாண்மை இயக்கத்தின் (ஜல் சக்தி அபியான்) கீழ் நடைபெற்ற பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பிரமோத்குமார் பதக் பேசியதாவது:-

மத்திய அரசால் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்க நிகழ்ச்சிகள் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியம், மழைநீரை சேமிப்பதன் அவசியம், நிலத்தடி நீரை பாதுகாப்பதன் அவசியம் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

உறிஞ்சு குழிகள்

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய கட்டிட வரைவுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வீடுகளில் மழைநீர் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட நீரை உறிஞ்சு குழிகளில் செலுத்திடும் வகையில் அமைப்பினை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்