குப்பைகளை அகற்ற என்.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்த கருவி

குப்பைகளை அகற்ற என்.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்த கருவி திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.

Update: 2019-09-01 22:30 GMT
திருச்சி,

திருச்சி என்.ஐ.டி.யில் டிசைனர் கன்சார்சியம் என்ற அமைப்பினரும், கடந்த 1983-ம் ஆண்டில் படித்து முடித்த மாணவர்களும் சாலையை சுத்தப்படுத்த கருவி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதில் குறைந்த விலையில் கருவியை தயாரித்தனர். இந்த கருவி ‘வேக்கம் கிளினீர்’ போல வடிவமைத்துள்ளனர். மேலும் அதனை சோதனை செய்து இயக்கி வெற்றி கண்டனர். இந்த கருவியை திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி என்.ஐ.டி.யில் நடந்தது. அதனை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம், என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் ஒப்படைத்தார். இந்த கருவியை திருச்சியில் சாலைகளில் விரைவில் பயன்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்