இந்திய குடியரசு கட்சி பா.ஜனதாவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை ; ராம்தாஸ் அத்வாலே கூறுகிறார்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சி பா.ஜனதாவுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Update: 2019-09-07 23:00 GMT
நாக்பூர், 

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

இந்திய குடியரசு கட்சி, பா.ஜனதாவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சில பொதுவான திட்டங்களில் அடிப்படையிலேயே இரு கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இதன்காரணமாக நாங்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளோம்.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எங்களது கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மேலும் எங்கள் வேட்பாளர்கள் வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்