ஆலங்குடியில், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆலங்குடியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-10 21:45 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தலைவர் மதலை மரியம்மாள், செயலாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூமா மணி, செல்வராஜ், செல்வகுமார் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் தொடக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், வெண்ணவால்குடி ஊராட்சி இந்திரா நகரில் காலனி மக்களுக்கு சொந்தமான பொது இடம் உள்ளது. அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகிறார். ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும். தெரு மக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி தர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும். வீட்டு மனையில்லாத ஏழை மக்களுக்கு இடம் தேர்வு செய்து வீட்டு மனை வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சகாயமேரி சகாயம், பெரியநாயகி ராசு, தர்மபிரசாத், வேலன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

மேலும் செய்திகள்