சிதம்பரத்தில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-13 21:45 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பனை செல்வம் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்லையா, விவசாய சங்க குமராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் சம்பா சாகுபடி தொடங்குவதற்கு வீராணம் ஏரியில் இருந்து அனைத்து கிளைவாய்க்கால்களிலும் தண்ணீரை திறந்து விட வேண்டும், சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும், சம்பா சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரம் உள்ளிட்ட இடுபொருட்களை மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் ராமச்சந்திரன், மூர்த்தி, நிர்வாகிகள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்