குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,541 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,541 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2019-09-14 23:00 GMT
நாகர்கோவில்,

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று நடந்தது. குமரி மாவட்டத்திலும் லோக் அதாலத் நிகழ்ச்சி 5 கோர்ட்டுகளில் நடந்தது.

நாகர்கோவில் கோர்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி கோமதி நாயகம் தலைமை தாங்கினார். நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் உள்பட பல நீதிபதிகள் பங்கேற்று வழக்குகளை விசாரித்தனர். நிகழ்ச்சியில் விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள் உள்பட மொத்தம் 7,176 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை மூலமாக வழக்குகளுக்கு நீதிபதிகள் தீர்வு கண்டனர்.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,541 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 1 கோடியே 67 லட்சத்து 39 ஆயிரத்து 745 ரூபாய்க்கு தீர்வு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்