பாதாள சாக்கடை திட்டப்பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

அண்ணாமலைநகர் பகுதியில் பாதாளசாக்கடை குழாய்பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-09-17 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி-2 மத்திய அரசின் அடல் மிஷன் புனரமைப்புத் திட்டம் 2016-2017 திட்டத்தின் கீழ் ரூ.85½ கோடி மதிப்பீட்டில் அம்மையப்பன் நகர், அண்ணாமலைநகர் பகுதியில் பாதாளசாக்கடை குழாய்பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து அனைத்து சாலைகளையும் ஒரு வார காலத்திற்குள் செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என என்ஜினீயர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இத்திட்டம் 2021-ம் ஆண்டு முழுமையாக முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதாள சாக்கடை இணைப்பு பெற மாநகராட்சி அலுவலகத்தில் முன்வைப்புத்தொகை செலுத்தி பயன்படுத்தி கொள்ளுமாறும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அமுதவள்ளி மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்