கேரளாவுக்கு கடத்த மீன்ஏலக்கூடம் பகுதியில் பதுக்கிய 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த மீன்ஏலக்கூடம் பகுதியில் பதுக்கிய 3 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-09-21 23:00 GMT
குளச்சல்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பறக்கும் படை தாசில்தார் சதானந்தன் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளச்சல் துறைமுகம் பழைய மீன் ஏலக்கூடம் அருகே தார்ப்பாயால் சாக்கு மூடைகள் மூடப்பட்டிருந்ததை கண்டனர்.

ரே‌ஷன் அரிசி பறிமுதல்

இதனையடுத்து அதனை திறந்து பார்த்த போது, அதில் சிறு, சிறு மூடைகளில் 3 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை குலசேகரம் உடையார்விளையில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கேரளாவுக்கு கடத்த ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்