தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஜெயங்கொண்டம் அரிமா சங்கம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2019-09-22 22:45 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஜெயங்கொண்டம் அரிமா சங்கம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்தின் பயன்கள் குறித்து வில்லுப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம், பேச்சுப்போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சியின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு விருந்தினராக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மேம்பாட்டு குழு தலைவர் கோமகன், ஜெயங்கொண்டம் அரிமா சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாவித்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்