தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் அன்னதானக்கூடம் அமைச்சர் திறந்து வைத்தார்

தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் அன்னதானக்கூடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

Update: 2019-09-22 22:30 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலில் தமிழக அரசின் சார்பில் ரூ.38 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தையும், ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முடி காணிக்கையளிக்கும் அரங்கினையும், தனியார் பங்களிப்பின் மூலம் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் கூடம் திறப்பு விழா நடந்தது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேற்கண்ட கட்டிடங்களை திறந்து வைத்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி அன்னதானத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரே‌‌ஷ், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானே‌‌ஷ், கரூர் தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் மற்றும் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்