கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

Update: 2019-09-29 22:30 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. நவராத்திரி விழா 8–ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அம் மனுக்கு அஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அம்மன் மேள தாளம் முழங்க கொலு மண்டபத்தில் எழுந் தருளினார். மேலும் கொலு மண்டபத்தில் கொழு பொம் மைகள் அலங்கரித்து வைக் கப்பட்டு இருந்தது. அம் மனை பக்தர்கள் வழிபட்ட னர்.

பரிவேட்டை

மேலும், காலை 9 மணிக்கு பஜனை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை மங்கள இசை, ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, இரவு அம்மன் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழா வின் முக்கிய நிகழ்ச்சியான பரி வேட்டை  8–ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்