வாட்ஸ்-அப்பில் இழிவாக பேசி பதிவிட்டதை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

கூத்தாநல்லூரில் வாட்ஸ்-அப்பில் இழிவாக ேபசி பதிவிட்டதை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-10-04 23:00 GMT
கூத்தாநல்லூர், 

கூத்தாநல்லூர் முகமதுஅலி தெருவை சேர்ந்தவர் நூருல்அமீன் (வயது 65). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் கூத்தாநல்லூருக்கு வந்து அங்கு தங்கியுள்ளார். இவருடைய சகோதரர் சலீம் வெளிநாட்டில் உள்ளார். அதேபோல் கூத்தாநல்லூர் நேருஜி தெருவில் வசித்து வரும் முகமதுஅலி என்பவரும் வெளிநாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் சலீமை பற்றியும், அவரது குடும்பத்தினரை பற்றியும் முகமதுஅலி இழிவாக பேசி வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.

இதனை கூத்தாநல்லூரில் உள்ள நூருல்அமீன் பார்த்துவிட்டு முகமதுஅலியின் தந்தை நைனாமுகமதுவிடம் முறையிட்டுள்ளார். அப்போது நைனாமுகமது மற்றும் அவருடைய சகோதர்கள் இப்ராஹீம், ரபியுதீன் ஆகியோர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூத்தாநல்லூர் போலீசில் நூருல்அமீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெளிநாட்டில் இருந்து வரும் முகமதுஅலி, அவருடைய தந்தை நைனாமுகமது, இப்ராஹீம், ரபியுதீன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்