திருச்சி விமான நிலையத்தில் ரூ.15¼ லட்சம் தங்கம், 8 மடிக்கணினி வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15¼ லட்சம் தங்கம், 8 மடிக்கணினி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-10-08 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்வதற்காக வந்திருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது,சிவகங்கை மாவட்டம்இளையான்குடியை சேர்ந்த ஆசாத்(வயது 38) என்பவர் தனது உடைமையில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை மறைத்து எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரிடம் இருந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

402 கிராம் தங்கம்

அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தனது உடைமையில் ரூ.15¼ லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம், 8 மடிக்கணினி, 300 பிளாஸ்டிக் பட்டாசுகள் ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்துல்ரகுமானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்