திருப்பூரில் உள்ள காந்தியின் அஸ்தி கலசத்திற்கு குமரி அனந்தன் மலர்தூவி மரியாதை

திருப்பூரில் உள்ள காந்தியின் அஸ்தி கலசத்திற்கு குமரி அனந்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2019-10-09 23:00 GMT
திருப்பூர்,

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவை மாவட்டம் அன்னூரில் பாதயாத்திரை நடைபெற்றது.

இந்த பாதயாத்திரையை தொடங்கிவைப்பதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி ஆனந்தன் கோவை மாவட்டத்திற்கு வந்தார்.

அன்னூர் செல்வதற்கு முன்னதாக திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் பகுதியிலுள்ள காதி வஸ்திராலயத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காந்தி 1921-ம் ஆண்டு திருப்பூருக்கு வருகை புரிந்தார். அவர் கதர் தலைநகரம் என திருப்பூரை கூறினார். பெண்களுக்கு ராட்டையில் நூல் நூட்பது குறித்து எடுத்துரைத்தார். காதி என பெயர் வருவதற்கு ஒரு இஸ்லாமிய பெண் முக்கிய காரணம். காந்தி எங்கெல்லாம் சென்றாரோ அங்கொல்லாம் நாங்கள் (காங்கிரஸ்) நடைபயணம் மேற்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்திய தேசிய காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கோபி, பொருளாளர் மூர்த்தி, நிர்வாகிகள் செல்லமுத்து, செல்வக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்