பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கொரடாச்சேரியில், விவசாயிகள் சாலைமறியல் 48 பேர் கைது

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கொரடாச்சேரியில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-09 23:00 GMT
கொரடாச்சேரி,

2018-19-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத்தொகை, விடுபட்ட கிராமங்களுக்கு உடனடியாக பயிர்க்காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி கொரடாச்சேரியில் தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் ராமமூர்த்தி, சங்க பொருளாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் வேளாண்மை துறை உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சாலை மறியல் செய்த 48 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் திருவாரூர்-தஞ்சை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்