விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு

விஜயதசமியையொட்டி முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.

Update: 2019-10-09 22:30 GMT
கன்னியாகுமரி,

திருவனந்தபுரம் பவுர்ணமி காவு என்ற இடத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு விஜயதசமியையொட்டி 2½ அடி உயர களிமண்ணால் ஆன துர்க்கை அம்மன் சிலை மற்றும் வெண்கலத்திலான ்சரஸ்வதி, லெட்சுமி சிலைகளும் பூஜைக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி சிலைகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்தை புவன சந்திரன் தொடங்கி வைத்தார். ஆர்ய சாந்தவனா பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவன தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான சிவாஜி தலைமை தாங்கினார்.

முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சி.என்.ராஜதுரை, அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் வினோத், தலைமை பூசாரி தென்கரை மகாராஜ பிள்ளை, கோவில் நிர்வாகி சின்காதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, ஆர்.எஸ்.எஸ். பொ றுப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்