விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்

விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் பள்ளி மாணவர்கள் நாற்று நட்டனர்.

Update: 2019-10-12 23:00 GMT
திருச்சி,

விவசாயிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் பிரைமரி பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், விவசாயிகள் பற்றியும் அறியும் வகையில் பள்ளக்காடு பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

அங்கு வயல்களில் விவசாய தொழிலாளர்கள் பலர் நாற்று நட்டுக்கொண்டிருந்தனர். அது பற்றி மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினர். மேலும் ஒரு வயலில் மாணவ-மாணவிகளை இறக்கி நாற்று நட கற்றுக்கொடுத்தனர். மாணவ- மாணவிகளும் ஆர்வமுடன் நாற்றுகளை நட்டனர். அவர்களுக்கு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் உதவியாக இருந்தனர். விவசாயிகளுடன் மாணவ-மாணவிகள் கலந்துரையாடினர். விவசாயிகள், விவசாயம் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினர்.

விழிப்–பு–ணர்வு பதாகை

தொடர்ந்து விவசாயத்தை காப்போம், விவசாயிகளை போற்றுவோம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம், நாங்களும் விவசாயம் செய்வோம், விவசாய தொழிலை கைவிடமாட்டோம் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவ-மாணவிகள் எடுத்துக்கொண்டனர். மேலும் இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். விவசாயிகளுடன் உணவருந்தி நேற்று ஒரு நாள் முழுவதையும் வயல்வெளியில் களித்தனர்.

மேலும் செய்திகள்