மோடி-ஜின்பிங் சந்திப்புக்கு பின் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நேற்று 2-வது நாளாக சிறப்புற நடந்தேறியது.

Update: 2019-10-12 21:48 GMT
மாமல்லபுரம்,

பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் இருந்து சென்ற நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட நேற்று மாலை 4 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா கடற்கரை கோவில், ஐந்துரதம் தவிர்த்து மற்ற புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், கணேசரதம், கிருஷ்ணமண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க பயணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.

இதை அடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோடியும், ஜின்பிங்கும் சந்தித்து புகைப்படம் எடுத்த அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல் பகுதியை பார்வையிட்டு தாங்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பாதுகாப்பு பணிகளை முடித்துவிட்டு அவரவர் ஊர்களுக்கு செல்லும் போலீசாரும் புராதன சின்னங்கள் முன்பு செல்பி எடுத்துவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்