மாணவர் சங்க நிர்வாகியை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாணவர் சங்க நிர்வாகியை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-14 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாமல் வந்த மாணவர்களை நிறுத்தி போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாகவும், இதில் மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவர் சங்க நிர்வாகிகளை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்தும் திருவாரூர் அரசு திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் பிரகா‌‌ஷ், மாவட்ட செயலாளர் சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோ‌‌ஷங்கள்

அப்போது மாணவர் சங்க நிர்வாகியை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்