சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம்

திருவாரூர் மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2019-10-14 22:30 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தாசில்தார் மலர்க்கொடி தொடங்கி வைத்தார். கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஆஸ்பத்திரி சாலை, லெட்சுமாங்குடி கடைவீதி சாலை, ஏ.ஆர்.ரோடு, மேலக்கடைத்தெரு, பாய்க்காரத்தெரு, பெரியக்கடைத்தெரு, ரேடியோ பார்க், புதிய பஸ் நிலையம் வழியாக சென்றது. இதில் தேர்தல் துணை தாசில்தார் சந்திரசேகரன், தலைமையிடத்து துணை தாசில்தார் சிவதாஸ் மற்றும் சரக வருவாய் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

இதேபோல் வலங்கைமானில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூஸ்‌‌ஷணகுமார் தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் இஞ்ஞாசிராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தன், ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், இளையராஜா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நன்னிலம்

நன்னிலத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின ஊர்வலம் நடந்தது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை தாசில்தார் திருமால் தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டியவை குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் நடந்த ஊர்வலத்திற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகப்ரியா, உதவும் மனங்கள் அமைப்பின் தலைவர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்