ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது இல.கணேசன் பேட்டி

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

Update: 2019-10-15 23:15 GMT
அரியலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டுக்கு ஆபத்தானது. அவர் இவ்வாறு பேசுவது ஒன்றும் புதிதல்ல. கொல்லப்பட்டவர் தனி நபரல்ல. நாட்டின் பிரதமர். அந்நியநாட்டு சக்திகள் நம் நாட்டு பிரதமரை கொன்றுள்ளதால் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இந்த வழக்கை தீவிரமாக கண்காணிக்கும். சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்தித்து பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சீனா, இந்தியா நல்லுறவு மேம்பட்டுள்ளது. வரும் காலங்களில் சீனா இந்தியா பொருளாதார வளர்ச்சியை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது.

முன்னேற்றம் கண்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது தற்காலிகமானது. விரைவில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையிலும், நமது நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம், ஆளுநர் வசம் ஒப்படைத்துள்ளது. அதனை அவரே தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுப்பார். தமிழக பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி பதவிகளும் ஜனநாயக முறையில் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு நியமிக்கப்படுவார்கள்

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்