டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் அலுவலர்கள் துரிதமாக பணியாற்ற வேண்டும் - கலெக்டர் உத்தரவு

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் அலுவலர்கள் துரிதமாக பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-10-23 22:30 GMT
கடலூர்,

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்துத்துறை அலுவலர்களும் மழைக்காலங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மழைக்காலத்தில் ஜெனரேட்டர். மணல் மூட்டைகள், தேவையான பாதுகாப்பு கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு கருவிகளை பழுதடையாமல் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களை தங்க வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிக்கட்டிடங்கள் சேதமடைந்து இருந்தால், அதை சரி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியிலும் அலுவலர்கள் அனைவரும் துரிதமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்