மாவட்ட செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.7½ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.7½ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் மன்னார்குடியை சேர்ந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை.
திருச்சி,

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 26-ந் தேதி விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மகேஷ்(வயது 33) என்பவர் எடுத்து வந்த மின்மோட்டாரில் 200 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மகேஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்