அரியலூர்-பெரம்பலூரில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரத்னா தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை, அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Update: 2019-10-31 23:00 GMT
அரியலூர்,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரத்னா தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை, அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ராஜராஜன், (வளர்ச்சி) ஸ்ரீராம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, சமூக நல அலுவலர் ரேவதி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் எதிர்ப்பு வார உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் செய்திகள்