கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி - கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு

கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-11-07 22:34 GMT
கடலூர், 

கடலூர் அருகே விலங்கல்பட்டு கிராம விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்கிடவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.12½ கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகளை விரைந்து முடிக்கவும், மழைக்காலம் என்பதால் அணைகளின் மதகுகள், கரைகளின் உறுதித்தன்மையை அவ்வப்போது ஆராய்ந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக பண்ருட்டி திருவதிகை மற்றும் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள அணைக்கட்டுகளை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதகு மற்றும் கரைகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கடலூர் தாசில்தார் செல்வ குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்