காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்: அத்திவரதர் தரிசன திருவிழா நினைவு கல்வெட்டு

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன திருவிழா நினைவு கல்வெட்டு கலெக்டர் திறந்து வைத்தார்.

Update: 2019-11-17 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன திருவிழா இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த திருவிழாவை நினைவு கூறும் வகையில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது.

இதனை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், தலைமை பட்டாச்சாரியார் கிட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்வெட்டில் அத்திவரதர் பெருவிழா நினைவு கல்வெட்டு எனவும், இந்த விழாவின் நினைவாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும், 40 ஆயிரம் அத்திமரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் நடுவில் அத்திவரதர் நின்ற கோலத்திலும், சயனக்கோலத்திலும் காட்சியளிக்கும் தோற்றமும், அத்திமரமும் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்