தேசிய ஒருமைப்பாட்டு வார விழா நிறைவு: மாணவர்கள், வீட்டில் மரக்கன்று நடுவது அவசியம் - கலெக்டர் அறிவுறுத்தல்

மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மரக்கன்றுகள் நடுவது அவசியம் என்று கலெக்டர் விக்ராந்த் ராஜா கூறினார்.

Update: 2019-11-25 23:57 GMT
காரைக்கால்,

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, நேற்று கோட்டுச்சேரி ஞானவாய்க்கால் பகுதி அருகில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, பள்ளி மாணவர் களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கவும், மழை பெறவும், அனைவரும் மரக்கன்றுகள் நடுவது அவசியம். குறிப்பாக, மாணவர்கள் தங்களது வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது போல் வீட்டைச்சுற்றியும், பள்ளியிலும் ஒரு மரக்கன்றினை நட்டு வளர்க்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், துணை கலெக்டர் ஆதர்ஷ், வேளாண் துறை துணை இயக்குனர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்